Skip to content

Explore Your Community

List your business

Businesses · News · Events

Tamil Literary Garden
Community & Non-profit

Tamil Literary Garden

Markham · Tamil & English

A Little About Us

Tamil Literary Garden - தமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ் இலக்கியத் தோட்டம் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் என்பது கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், மற்றும் கொடையாளர்கள் ஆகியோரின் ஆதரவோடு 2001 ஆம் ஆண்டு டொரண்டோவில் நிறுவப்பட்ட ஒரு இலாபநோக்கற்ற அறக்கட்டளை ஆகும். உலகெங்கும் பரந்துள்ள தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதே இதன் பிரதான நோக்காகும். தமிழ் மற்றும் ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பை ஊக்குவித்தல் , அரிய தமிழ் நூல்களின் மீள் பதிப்பு , சமூகத்திற்கான தமிழ் இலக்கியப் பட்டறைகள் , மற்றும் கனடிய பல நூலகங்களுக்கு இலவச தமிழ் நூல்கள் வழங்கல் ஆகியவை இந்த அமைப்பின் முக்கியச் சேவைகளில் அடங்குகின்றன. இயல் விருது – வாழ்நாள் சாதனை கௌரவம் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சிறப்பான பணி, ஆண்டுதோறும் உலகளாவிய தமிழ் இலக்கிய சேவையாளர்களில் ஒருவருக்கு வழங்கப்படும் “இயல் விருது” ஆகும். வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனையை மதிக்கும் இந்த விருது, பாராட்டுக் கேடயம் 1500 கனேடிய டொலர் பணப்பரிசு இவற்றைக் கொண்டுள்ளது. உலகத் தமிழறிஞர்கள் இணைந்துள்ள சர்வதேச ஆலோசனைக் குழு பரிந்துரையின்படி இந்த விருது வழங்கப்படுகிறது. படைப்பாளர்கள், கல்வியாளர்கள், பதிப்பாளர்கள், விமர்சகர்கள் அல்லது பிற வகையில் தமிழ் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு செய்தவர்களுள் ஒருவருக்கு இது வழங்கப்படும். இயல் விருது பெற்ற முக்கிய ஆளுமைகள்: சுந்தர ராமசாமி, கே. கணேஸ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் ஹார்ட், ஏ.சீ. தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோர்ன், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ். பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர். வருடாந்திர இலக்கியப் பரிசுகள் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் புனைவு , அபுனைவு , கவிதை , தமிழ் தகவல் தொழில் நுட்பம் இத்துறைகளில் சிறந்த படைப்பாளர்களுக்கும் தனித்த விருதுகள் வழங்கப்படுகின்றன. புலமைப் பரிசு மற்றும் கல்விச் சேவைகள் கனடிய பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியை பயிலும் மாணவர்களில் சிறந்து விளங்குபவருக்கு $1000 புலமைப் பரிசு அளிக்கப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் டொரண்டோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து, உலகின் முக்கிய தமிழ் அறிஞர்களின் சிறப்பு விரிவுரைகள் ஏற்பாடு செய்யப்பட்டு, தமிழ் கல்வி ஆர்வலர்களுக்கு வள

LocationMarkham
CategoryCommunity & Non-profit
LanguagesTamil · English
Tamil Literary Garden in Markham | Tamil Directory